உக்ரைன் நாடே இருளுக்குள் மூழ்கி சிக்கி தவிப்பு: அதிர்ச்சியூட்டும் நாசா செயற்கைக்கோள் புகைப்படங்கள்



மின் சக்தி நிலையங்கள் மீது ரஷ்யாவின் தொடர் ஏவுகணை தாக்குதல்கள் எந்த அளவிற்கு உக்ரைனை இருட்டுக்குள் தள்ளியுள்ளது என்பதை நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

உக்ரைனின் சக்தி நிலையங்கள் மீது குறி

கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்ய படைகளின் மன சோர்வு மற்றும் உக்ரைனிய படைகளின் பதில் தாக்குதல் ஆகியவற்றால் போரின் ஆரம்ப நாட்களில் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்து இருந்த நகரங்களை கூட தற்போது உக்ரைனிடம் இழந்து வருகிறது.

கிரிமியாவின் திறவுகோலாக பார்க்கப்படும், ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைனிய நகரமான கெர்சனை கூட சமீபத்தில் ரஷ்ய படைகள் இழந்துள்ளனர்.

ஏற்கனவே போரின் விளைவாக உக்ரைனின் பெருவாரியான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்து இருக்கும் நிலையில் தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனின் சக்தி நிலையங்கள்(மின் உற்பத்தி நிலையங்கள்) மீது தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

ரஷ்ய படைகளின் இந்த தாக்குதல் மூலம் உக்ரைனின் பல பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளுக்குள் மூழ்கி உள்ளது.

நாசா-வின் செயற்கைக்கோள் புகைப்படங்கள்

உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் ஏற்கனவே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் வாடி வரும் நிலையில், நேற்று உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா பல அடுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் உக்ரைன் முழுவதும் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டு முழு நாடே இருளுக்குள் மூழ்கி அவதிப்பட்டு வருகிறது.

உக்ரைனின் இந்த இருட்டிப்பு நிகழ்வை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ரஷ்யாவின் தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைனின் காட்சிகளை  செயற்கைக்கோள் மூலம் படம் பிடித்து அந்த புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டுள்ளது.

இந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் உக்ரைன் நாடு முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி இருக்கும் காட்சி துண்டாக காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்று மெதுவாக பல இடங்களில் சக்திகள் மீண்டும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.