எடப்பாடி பழனிசாமி ஜெயிலுக்கு போவது உறுதி… ஆவேசமாக சொன்ன ஆர்எஸ் பாரதி!

தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப் பொருட்கள் விற்பனை அதிகரி்த்துவிட்டது எனவும் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை, எதிர்க்கட்சி தலைவர்

சந்தித்து நேற்று புகார் மனு அளி்து

தற்போதைய திமுக ஆட்சியி்ல் தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவிட்டதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை வி்ற்பனை செய்பவர்களே பாஜகவினர்தான். அவர்களை தட்டிக்கேட்கும் தைரியம் எடப்பாடி பழணிசாமிக்கு உள்ளதா?

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது என்பதை உணர்த்த எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் குட்காவை சட்டமன்றத்துக்கு எடுத்து சென்றனர். அத்ற்காக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான் அப்போதைய அதிமுக அரசு திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான் குட்கா ஊழல் எனும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. இந்த ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அடங்கிய ஆவணமும் விசாரணை அமைப்பான சிபிஐ வசம் சிக்கி உள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தற்போது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஜெயிலுக்கு போகப்போவது உறுதி.

இந்தி எதிர்ப்பு என்பத எங்களது ரத்தத்தில் ஊறிய ஒன்று. கலைஞர் கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு அடித்தளமாக அமைந்ததே இந்தி எதிர்ப்பு போராட்டம்தான். 14 வயதில் ஹிந்திக்கு எதிராக போராட துவங்கிய கலைஞக் கருணாநிதி. தமது 93 வயது வரை இந்த எதிர்ப்பில் இம்மி அளவும் மாறாமல் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்துள்ளார்.

திராவிட கொள்கையை கடைபிடி்க்கும் ஒரே கட்சி திமுகதான். ஆனால் ஆர்எஸ்எஸ் கூட்டத்தை வைத்து கொண்டு, தமிழக ஆளுநர் ஆர்என் ரவி திராவிடம் என்று ஒன்றோ, திராவிட நாடு என்ற ஒன்றோ இல்லைவே இல்லை என்றெல்லாம் தமிழை அழித்து, ஹிந்தியை திணி்க்கும் நோக்கத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்று இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருவதால்தான் நம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் தமிழ்நாட்டிலேயே பணிபுரிய முடிகின்றது. அண்ணா இருந்த காரணத்தினாலும், திமுக இருக்கும் காரணத்தினாலுமே இங்கு தமிழ் இன்னும் வாழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழக காவல் துறை ஆபரேசன் கஞ்சா எனும் அதிரடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.