ஒரே ஒரு கொலை…. பதறவைக்கும் காரணம்: 49 பேர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்

அல்ஜீரியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக கூறி ஒருவரை பொதுமக்கள் குழு ஒன்று அடித்தே கொன்ற சம்பவத்தில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் எரித்துக் கொலை

கொல்லப்பட்ட 38 வயது ஜமீல் பின் இஸ்மாயில் சம்பவத்தின் போது பொலிஸ் பாதுகாப்பில், பொலிஸ் வாகனத்திலே இருந்துள்ளார்.
ஆனால், கட்டுப்பாட்டை மீறிய குழு ஒன்று, பொலிஸ் வாகனத்தில் இருந்து அவரை இழுத்து சென்று, கொடூரமாக தாக்கியதுடன், உயிருடன் எரித்துக் கொன்றுள்ளது.

ஒரே ஒரு கொலை.... பதறவைக்கும் காரணம்: 49 பேர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் | Algeria Forest Fires Death Sentenced 49 People

@dailymail

2021 ஆகஸ்டு மாதம் நடந்த இச்சம்பவத்தில், காட்டுத்தீயை ஏற்படுத்தியதாக கிராம மக்கள் சந்தேகிப்பதாக கூறி இஸ்மாயில் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
குறித்த காட்டுத்தீயில் சுமார் 90 பேர்கள் மரணமடைந்திருந்தனர்.

காட்டுத்தீ பரவியதாக நாடு முழுவதும் தகவல் வெளியான நிலையில், இஸ்மாயில் பொதுமக்களுடன் இணைந்து தன்னார்வலராக தீயணைக்கும் நடவடிக்கையில் களமிறங்கினார்.

ஒரே ஒரு கொலை.... பதறவைக்கும் காரணம்: 49 பேர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் | Algeria Forest Fires Death Sentenced 49 People

@getty

குடியிருப்பில் இருந்து புறப்படும் முன்னர், தாம் காட்டுத்தீ பரவும் பகுதிக்கு புறப்படுவதாக சமூக ஊடகத்தில் பதிவு செய்திருந்தார்.
தொடர்ந்து, அல்ஜீரியாவிலேயே காட்டுத்தீயால் மிகவும் பாதிப்புக்குள்ளான Larbaa Nath Irathen என்ற பகுதிக்கு சென்ற இஸ்மாயிலை,

49 பேர்களுக்கு மரண தண்டனை

உள்ளூர் மக்கள் கூட்டத்தில் ஒருவர், காட்டுத்தீயை ஏற்படுத்தியவர் இவர் தான் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, இஸ்மாயிலை பாதுகாக்க முயன்ற பொலிசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஒரே ஒரு கொலை.... பதறவைக்கும் காரணம்: 49 பேர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் | Algeria Forest Fires Death Sentenced 49 People

@AP

தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கைதான கிராம மக்களில் 49 பேர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான அல்ஜீரியாவில் 1993க்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்படுவது அரிதான நிலையில், தற்போது சம்பவத்தின் தன்மையை கருத்தில் கொண்டு நீண்ட பல ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 28 பேர்களுக்கு தலா 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும் பிணை மறுப்பும் அறிவித்துள்ளனர். 

ஒரே ஒரு கொலை.... பதறவைக்கும் காரணம்: 49 பேர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் | Algeria Forest Fires Death Sentenced 49 People

@getty

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.