டிஜிடல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி

ஒவ்வொரு பிரஜைக்கும் டிஜிடல் அடையாள அட்டையை வழங்கும் நிகழ்ச்சி அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யுனிக் அடையாள அட்டை என்ற பெயரில் 15வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் டிஜிடல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும், இந்நிகழ்ச்சித் திட்டம் தொழில்நுட்ப அமைச்சின் கீழ், அடுத்த ஆண்டில் பாரிய நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தொழில் நுட்ப அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, அரசாங்கத்தின் சேவைகள் பலவற்றை வினைத்திறனாக மாற்றுவதாகும். பிரஜையொருவரின் பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை இதனூடாக டிஜிடல் மயப்படுத்துவதாகும்.

12மில்லியன் ரூபா நிதி இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக செலவிடப்படுவதுடன் இதற்காக இந்தியாவின் நிதியுதவி கிடைக்கப்பெறவுள்ளது.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடனான இணக்கத்திற்கு ஏற்ப விசேட குழுவொன்று இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இதனால் வினைத்திறனாகும் அரச சேவைகளில் இலஞ்ச ஊழல் தடைப்படும். நிவாரணம் தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அனைத்து நிவாரணம் இவ்வடையாள அட்டை ஊடாக வழங்கப்படும்.

அப்பாவி மக்கள் தமக்கு இழைக்கப்படும் அநியாயங்களை இப்புதிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நிறுத்தப்படும். மக்களுக்குத் தமது பிரதேசத்திலிருந்தே இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டார்.

மேலும் அரச சேவைக்கு அவசியமான வலையமைப்பு மற்றும் முகில் கணிப்பு (Cloud – உட்கட்டமைப்பு வசதி) ஆகிய இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அடுத்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தவிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டிஜிடல் தொழில்நுட்பத்தை அவதானிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கனக ஹேரத் சுட்டிக்காட்டினார்.

டிஜிடல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை புதுப்பிப்பதற்காக அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக விவசாயத்துறைக்கும் டிஜிடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

 E Parliament எனும் நிகழ்ச்சித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்த வருடத்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அது 2023இல் 3மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை, ஆடைக் கைத்தொழில் போலன்றி இது அதிக வசதியுடன் நடைமுறைப்படத்த முடிந்த தகவல் தொழில்நுட்பக் கைத்தொழில் துறைக்காக 20,000 துறை சார்ந்தவர்கள் அவசியம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கிணங்க, எதிர்காலத்தில் கலைப் பட்டத்திற்கு, தகவல் தொழில்நுட்பப் பாடத்தை உள்வாங்குவதற்கு எதிர்பார்ப்பதாவும் அது தொடர்பாக கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சர் கனக ஹேரத் தெளிவுபடுத்தினார்.

பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்தவர்களுக்கு தொழிற்சந்தைக்குள் நுழைய முடியும் விதமாக பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும், அவை அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடு பூராகவும் உள்ள 1000 பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்….

பாடசாலைக் கட்டமைப்புக்காக artificial intelligence நிகழ்ச்சிகள் உள்வாங்கப்பட வேண்டும்.

அரச நிறுவனங்களின் இணையத்தளங்களைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரச நிறுவனங்களின் இணையத்தளங்களைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம்…

அதற்கிணங்க அடையாளப்படுத்தப்பட்ட பிரதான 10 அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தெளிவை, பயிற்சிகளை வழங்கி இணையத்தளங்களைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தகவல் பாதுகாப்பு சட்ட அதிகாரசபையை நிறுவுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெளிவுபடுத்தினார்.

டெலிகாம் நிறுவன மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முனைவதாக நிதி அமைச்சின் ஊடாக இதற்கான விசேட குழுவொன்றை நியமிக்கவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்  மேலும் தெளிவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நேற்று (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்:

“முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜப க்க்ஷ நாட்டை மாத்திரமல்ல, இராணுவத்தையும் இல்லாதொழித்து சென்றுள்ளார் என இராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

கோட்டபய ராஜபக்ஷ கால்வாய், சுத்தப்படுத்துவதற்கும், கட்டடம் அமைப்பதற்கும், வீதி நிர்மாணிப்புக்கும் இராணுவத்தை பயன்படுத்தினார்.

அமுதா கத என்ற விசேட படையணியை உருவாக்கி 40 ஆயிரம் பேரை இணைத்துக்கொண்டு தனது இராணுவ நிலைப்பாட்டை மேம்படுத்தினார்.

இதன்பிறகு விவசாயத்துறை தொடர்பில் படையணியை ஸ்தாபித்து விவசாயத்தையும் முழுமையாக இல்லாதொழித்தார்.

நான் இராணுவத்தை அவமதிக்கும் வகையில் செயற்படவில்லை. இன்று இராணுவத்திற்காக வரிந்துக் கொள்பவர்கள் இராணுவத்தின் சம்பளம் தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்தினரது சம்பள அதிகரிப்புக்காக 20 பில்லியன் ரூபா மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகிய எமக்க ஒன்றும் தெரியாது. தெரிந்தவர்களினால் நாடு சீரழிந்துள்ளது. இருப்பதையும் சீரழிக்க வந்துள்ளார்கள். இராணுவத்தினரை விற்கு பிழைத்து அரசியல் செய்யும் தரப்பினர் இராணுவத்தினரது சம்பளம் பற்றி கருத்துரைக்கவில்லை.”

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.