திமுக vs பாஜக… ரத்தம் தெறிக்க செம சண்டை… மொடக்குறிச்சியில் என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 15 வார்டுகள் இருக்கின்றன. இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்

10, அதிமுக 1, பாஜக 2, மற்றவை 2 என வெற்றி வாகை சூடினர். இந்த பேரூராட்சியின் தலைவராக மொடக்குறிச்சி திமுக பேரூர் செயலாளர் சரவணனின் மனைவி செல்வாம்பாள் உள்ளார். இந்நிலையில் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

பேரூராட்சியில் நிதி முறைகேடு

அதில், பேரூராட்சியில் நடந்த நிதி முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சி பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இது திமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முன்னதாக பேரூராட்சியில் நிதி முறைகேடு நடப்பதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சிவசங்கர் மீது குற்றச்சாட்டு

அதன்பேரில் சமீபத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் போஸ்டர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தரப்பு மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தது. அதாவது, பாஜக கவுன்சிலர் சத்யாவின் கணவர் சிவசங்கர் மீது குற்றம்சாட்டியிருந்தனர். உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அடித்துக் கொண்ட திமுக, பாஜக

இந்த விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்க ஆலங்காட்டுவலசு பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்ற திமுகவினர் முயன்றனர். அப்போது அங்கு பாஜக நிர்வாகி சிவசங்கர் வந்துள்ளார். அவருக்கும், திமுக தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கைகலப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதில் சிவசங்கரின் முகம், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ரத்தம் வடிந்ததை பார்க்க முடிந்தது. இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனே சிவசங்கர் ஆதரவாளர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். திமுக தரப்பிற்கு களங்கம் விளைவிக்கும் அளவிற்கு செயல்பட்டுள்ளனர். எனவே வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

சமாதானம் செய்த மொடக்குறிச்சி போலீஸ்

இந்த சூழலில் போலீஸ் நிலையத்தின் முன்பு திமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஏராளமானோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இறுதியில் இருதரப்பினரின் புகார் மனுக்களையும் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர்.

மேற்கொண்டு சலசலப்பு ஏற்படாத வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி தகவலறிந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி ஆகியோர் நேரில் வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். திமுக, பாஜக இடையில் ஏற்பட்ட போஸ்டர் மோதலால் மொடக்குறிச்சி பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.