மழைக்கு லீவு… க்ளைமேட் இனிமே இப்படித்தான் இருக்கப் போகுதாம்… நடுங்கப் போகும் தமிழகம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு கிடைக்கும். நவம்பரில் ட்ரைலரும், டிசம்பரில் மெயின் பிக்சரும் காட்டி விடும் என்பார்கள். அந்த வகையில் நடப்பு மாதம் இருமுறை பருவமழை வெளுத்து வாங்கி விட்டது. அதன்பிறகு மழையை காணவில்லை. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக நகர்ந்து நிலப்பகுதிக்கு வரும் என்று எதிர்பார்த்தால் உள்ளே வராமல் அடம்பிடிக்கும் நிலையை தான் பார்க்க முடிந்தது.

இதற்கிடையில் தாழ்வு நிலை வலுவிழந்து மறைந்து போனது. அடுத்து எப்போது மழை என எதிர்பார்க்கும் நிலை காணப்படுகிறது. இந்த சூழலில் மழை வராது. குளிர் தான் வரும். அதுவும் பனிப்பொழிவு, கடும் குளிர் என வேற லெவலில் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு வட துருவத்தில் இருந்து வீசும் காற்று தான் முக்கிய காரணமாக விளங்குகிறது. குளிர் ஆரம்பித்து விட்டால் அப்புறம் மழையை பார்க்க முடியாது.

நடப்பாண்டை பொறுத்தவரை வழக்கத்தை விட சீக்கிரமே வட துருவக் காற்று வந்துவிட்டது. இந்த சூழலில் கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதிக்கு மேகங்கள் வந்தால் தரைப் பகுதியில் குளிர் குறையக்கூடும் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக சில வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் வரும் நாட்களில் அதிகாலை தொடங்கி காலை 9 மணி வரை பனிப்பொழிவு நீடிக்கும்.

அடுத்த 10 நாட்களுக்கு வடகிழக்கு பருவக் காற்று வீசுவது படிப்படியாக குறையக்கூடும். இதனால் டிசம்பர் மாதம் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு வானிலை மாற வாய்ப்புள்ளது. சீக்கிரமே இருட்டி விடும். லேட்டாக தான் விடியும். அதுவும் மலைப் பகுதிகளில் குளிர் உச்சம் தொட்டு வாட்டி வதைக்க வாய்ப்புள்ளது.

இத்தகைய சூழலை மிகவும் எச்சரிக்கையாக தான் எதிர்கொள்ள வேண்டும் என்கின்றனர். தமிழகத்தில் பனிப்பொழிவு ஜனவரி இரண்டாவது வாரம் வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே குளிரை தாங்கும் வகையில் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். வைரஸ் நோய்கள் எதுவும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

ஸ்வட்டர் அணிந்து குளிரை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளிர் காலம் விவசாயத்திற்கு மிகவும் நல்லது எனக் கூறப்படுகிறது. ஏனெனில் நெற்பயிர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும். சேதம் ஏதுமின்றி நல்ல விளைச்சலுக்கு உறுதுணையாக இருக்கும். முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.