Anoushka Sunak: குச்சிப்புடி நடனமாடிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மகள்

பிரிட்டன் நாட்டில் நடந்த சர்வதேச குச்சிப்புடி நடன திருவிழாவில், பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷ்கா சுனக், 9, குச்சிப்புடி நடனம் ஆடினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (42) சில

மாதங்களுக்கு முன் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையுடன், கடந்த 200 ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்றவர்களில் மிக இளையவர் என்பதும் உள்ளது.

வழக்கமாக பிரிட்டன் பிரதமர்கள் வசிக்கும் வீட்டில் குடியேறாத பிரதமர் ரிஷி சுனக், அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் சிறிய குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தலைநகர் லண்டனில் சர்வதேச குச்சிப்புடி திருவிழா – 2022 என்ற நடன திருவிழா நடக்கிறது. இந்த விழாவில் 4 முதல் 85 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்பார்கள். இசைக் கலைஞர்கள், முதியவர்கள் கொண்ட நடன குழுவினர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கும் இந்த விழாவில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷ்காவும், குழந்தைகளுடன் இணைந்து குச்சிப்புடி நடனமாடினார். தாயார் அக்ஷதா மூர்த்தி, பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோரும் இந்த விழாவில் பங்கேற்று குச்சிப்புடி

நடனத்தை கண்டு ரசித்தனர்.

இந்தோனேஷிய நிலநடுக்கம்: பலி 310 ஆக உயர்வு; 24 பேர் மாயம்!

இது தொடர்பாக, ஆங்கில தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு, அனுஷ்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:

எனக்கு குச்சிப்புடி மற்றும் நடனம் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நீங்கள் நடனமாடும் போது உங்கள் கவலைகள் மற்றும் மன அழுத்தங்கள் அனைத்தும் நீங்கி விடும். மேலும், நண்பர்கள் அனைவருடனும் நடனமாடுவதால் பிடிக்கும். குடும்பம், வீடு மற்றும் கலாச்சாரம் ஒன்றாக இணைந்த இடம் இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.