திராவிடத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆவது பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில், அமெரிக்காவைச் சேர்ந்த பெரியார் பன்னாட்டு அமைப்பின் “சமூக நீதிக்கான கி.வீரமணி விருது” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மிசா காலத்தில் தமது உயிரை காத்த கருப்பு சட்டைக்காரர்தான் ஆசிரியர் கி.வீரமணி. திராவிட இயக்கம் கட்சி அல்ல; கொள்கை உணர்வு. அது வளரும். வளர்ந்துகொண்டே இருக்கும். திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” என்றார்,

இதனைத் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அதிமுக மெகா கூட்டணி அமைக்கும் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். ஆனால் அதிமுக கூட்டணி சிதறிப்போய்விட்டது” என்றார்.

நிகழ்வின் இறுதியாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிட மாடல் எனும் இரும்புக்கோட்டையில் மோதினால் மண்டை உடையுமே ஒழியுமே கோட்டை சரியாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எப்போதும் இந்த அணி பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளித்தார். என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.