நிச்சயம் இது அடுத்த SMS – ‘வரலாறு முக்கியம்’ ஜீவா ஷேரிங்ஸ்

ஜீவா நடிப்பில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள வரலாறு முக்கியம் படம் டிசம்பர் 9ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜீவா, “SMS (சிவா மனசுல சக்தி) படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாகத்தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் டிஎஸ்கே பேசுகையில்,  “சூப்பர் குட் பிலிம்ஸில் நான் நடித்தது எனக்கு பெருமையான விஷயம். இந்த இயக்குனர் போன்ற ஒரு கூலான மனிதரை பார்க்க முடியாது, மொத்த குழுவையும், நடிகர்களையும் சரியாக வழிநடத்தி படத்தை உருவாக்கியுள்ளார் என்று கூறினார். தொடர்ந்து ஷாரா பேசுகையில், “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பளித்த ஜீவா சார், சூப்பர் குட் பிலிம்ஸ்,  இயக்குனர் சந்தோஷ் மூவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளர் சக்தி, காமெடி சீனை கொரியோகிராப் செய்வார், அது பலரிடத்தில் இருப்பது இல்லை.  SMS போன்று இதுவும் ஒரு ஜாலியான படமாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்” என்று கூறினார்.

அவர்களைத் தொடர்ந்து நடிகை பிரக்யா நாக்ரா பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். அதற்கு இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றிகள். நான் முதன் முதலில் பார்த்த தமிழ் படம் சிவா மனசுல சக்தி படம்தான். ஜீவா போன்ற சிறந்த நடிகருடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி.  இது எனது கனவு நிஜமான தருணம் என்றார்.  

கடைசியாக, இயக்குநர் சந்தோஷ் ராஜன் கூறுகையில், இந்தப் படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். பிரக்யா குஜராத்தி பெண் ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்துவிட்டார். அந்தளவு கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.