இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : பாகிஸ்தான் வெற்றி பெற 263 ரன்கள் தேவை..!

ராவல்பிண்டி,

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில், 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 2 நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் சதம் அடித்தனர். தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 114 ரன்கள் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 121 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார். ஜாக்ஸ் பந்து வீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்தை விட பாகிஸ்தான் இன்னும் 158 ரன்கள் பின் தங்கியிருந்தது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி மேற்கொண்டு ரன்களை சேகரித்தது. ஆஹா சல்மான் அரைசதம் அடித்த நிலையில் ஜேக்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மக்மூத் 17 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 155. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 579 ரன்ன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாபிக், இமாம் உல் ஹக், பாபர் ஆசம் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் வில் ஜேக்ஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி 78 ரன்கள் முன்னிலை பெற்று தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது. சிறப்பாக விளையாடிய அந்த அணியில் ஜாக் கிராலி 50 ரன்களும் , ஜோ ரூட் 73 ரன்களும் , ஹார்ரி புரூக் 87 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்த்து அணி டிக்ளேர் செய்தது.இதனால் பாகிஸ்தான் அணிக்கு 343 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்க்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் ,அப்துல்லா ஷபிக் களமிறங்கினர். தொடக்கத்தில் அப்துல்லா ஷபிக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.அடுத்து அசார் அலி ரிட்டைர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.பின்னர் பாபர் அசாம் 4ரன்களில் ஆட்டமிழந்தார்.

4வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 263 ரன்கள் தேவைப்படுகிறது. 5வது நாள் ஆட்டம் நாளை நடக்க உள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.