இந்தியாவுக்கு எதிரான ஆக்கி தொடர் : 4-1 என வென்றது ஆஸ்திரேலியா

அடிலெய்டு,

இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட இந்திய அணி 3-வது ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது. இதில் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடந்தது .இந்த போட்டியில் 5-4 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.