கார் வாங்கணுமா? இந்த மாசமே வாங்குங்க!! மாருதியில் டிசம்பர் மாதம் எக்கச்சக்க தள்ளுபடிகள்

மாருதி ஆல்டோ கே10 தள்ளுபடி சலுகை: மாருதி சுஸுகி 2022 ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தலைமுறை ஆல்டோ கே10 ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே 10) நாட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ என்ற நான்கு ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இதில் மொத்தம் 6 வகைகள் உள்ளன. காரின் விலை ரூ.3.99 லட்சத்தில் தொடங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இப்போது ஆண்டின் இறுதியில், புதிய மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூ.50,000 வரை தள்ளுபடி சலுகையை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு அதன் மேனுவல் வேரியண்டில் ரூ. 50,000 வரையிலான மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இதில், ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் நன்மைகள் ஆகியவை அடங்கும்.

ஆல்டோ கே10 எல்எக்ஸ்ஐ (எம்டி), விஎக்ஸ்ஐ (எம்டி) மற்றும் விஎக்ஸ்ஐ + எம்டி ஆகியவை முறையே ரூ. 30,000, ரூ.25,000 மற்றும் ரூ.15,000 ரொக்கத் தள்ளுபடியைப் பெறுகின்றன. இவற்றின் மீது ரூ.15,000 பரிமாற்ற போனஸ், அதாவது எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.5,000 கார்ப்பரேட் சலுகையும் கிடைக்கின்றது. ஏஎம்டி மாறுபாட்டிற்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் நன்மைகள் மட்டுமே கிடைக்கும். ஆல்டோ கே10 ஏஎம்டி வகைகளில் ரொக்கத் தள்ளுபடி வழங்கப்படவில்லை.

இது தவிர, மாருதி ஆல்டோ 800 காரிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.34,000 மதிப்புள்ள நன்மைகள் இதில் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

ஹார்ட்டெக் இயங்குதளத்தின் அடிப்படையில் இயங்கும் புதிய மாருதி ஆல்டோ K10 காரில் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் K10C பெட்ரோல் எஞ்சிம் கிடைக்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸுடன் (ஆப்ஷனல்) வழங்கப்படுகிறது. இது 67 பிஎச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் அளிக்கின்றது. டூயல்ஜெட் தொழில்நுட்பம் மற்றும் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் இதில் உள்ளது. மேலும், இந்த கார் ஆல்டோ 800-ஐ விட அதிக அம்சங்களை பெற்றுள்ளது. இது ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகளையும் பெறுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.