ஈரானில் கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்பட்டதா… உண்மை நிலை என்ன !

ஈரானில் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தை அடுத்து, கலாச்சார காவல்துறை கலைக்கபட்டதாக அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் கூறியுள்ளார். ஆனால், கலாச்சார காவல் பிரிவு கலைக்கப்பட்டது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. மேலும் ஈரானிய அரசு ஊடகம், அரசு வழக்கறிஞர் முகமது ஜாபர் மொண்டசெரி, கலாச்சார காவல் பிரிவுக்கு பொறுப்பானர் அல்ல என்று கூறியது.

ஈரானில் கடுமையான இஸ்லாமிய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக 11 வாரங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் போதிலும், பெண்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும் மற்றும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற இஸ்லாமிய குடியரசின் கட்டாய ஹிஜாப் கொள்கையை தெஹ்ரான் மாற்றாது என்று ஈரானிய உயர் அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிஜாப் விதிகளை மீறியதற்காக கலாச்சார காவல் பிரிவினரால் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயதான குர்திஷ் ஈரானியப் பெண் மஹ்சா அமினி காவலில் மர்மமான முறையில் இறந்ததை தொடர்ந்து செப்டம்பரில் வெடித்த போராட்டத்தில், இது வரை நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

ஈரானின் மதகுரு ஆட்சியாளர்களுக்கு  எதிரான போராட்டத்த்தை தீவிரப்படுத்தும் நோக்கில் மூன்று நாள் பொருளாதார வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்றும், தெஹ்ரானின் ஆசாதி சதுக்கத்தில், பேரணி நடத்த வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். இதே போன்ற வேலைநிறுத்த நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் போராட்டத்துக்கான அழைப்புகள் காரணமாக,  கடந்த வாரங்களில் நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நடைபெறும் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில்  இந்த போராட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இரட்டை சகோதரிகளை மணந்த மகாராஷ்டிரா ‘வாலிபர்’; போலீஸார் வழக்குப் பதிவு!

போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளில், 64 சிறார்கள் உட்பட 470 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியது. 18,210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 61 பேர் கொல்லப்பட்டதாகவும் HRANA செய்தி நிறுவனம், கூறியது. எனினும், ஈரானின் உள்துறை அமைச்சகத்தின் மாநில பாதுகாப்பு கவுன்சில் சனிக்கிழமையன்று இறந்தவர்களின் எண்ணிக்கை 200 என்று தெரிவித்துள்ளதாக நீதித்துறையின் செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்துள்ளது.

அல் ஆலம் அரசு தொலைக்காட்சி, வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள கலாச்சார காவல் பிரிவு கலைப்பு குறித்து தெரிவிக்கையில், ” போராட்டங்களின் விளைவாக ஹிஜாப் மற்றும் மத ஒழுக்கம் மீதான அதன் நிலைப்பாட்டில் இருந்து இஸ்லாமிய குடியரசின் பின்வாங்கியுள்ளது ” என்று சித்தரிக்கிறது. ஆனால் கலாச்சார காவல்துறை நேரடியாக நீதித்துறையுடன் தொடர்புடையது அல்ல எனவும் அரசு வழக்கறிஞருக்கு அதற்கான அதிகாரம் இல்லை எனவும்  தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Miss World: கத்தார் உலக அழகிப்போட்டி! 45 லட்சம் பரிசு வென்ற உலக அழகி ஒட்டகம்

மேலும் படிக்க | கல்யாணத்துக்கு பஸ் புக் பண்ணு பாத்திருப்பீங்க ஆனா….Flight-ட்டு…வீடியோ வைரல்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.