450 ஆண்டுகால அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்த ஹன்சிகா திருமணம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ


நடிகை ஹன்சிகா – சோகேலின் திருமணம் ராஜஸ்தான் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

காதல் திருமணம்

கடந்த மாதம் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியும், தொழிலதிபர் சோகேல் கதுரியாவும் பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரம் முன்பு மோதிரம் மாற்றி தங்கள் காதலை உலகிற்கு வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று கூறப்பட்டது.

அதற்கான வேலைகள் தடபுடலாக நடந்து வந்தன.

இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை தனியார் நிறுவனம் ஒன்று வாங்கியதாக தகவல் பரவியது.

இந்த நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் நேற்றைய தினம் ஹன்சிகா – சோகேல் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹன்சிகா சோகேல்/Hansika-Sohael

வைரலான வீடியோ

ஹன்சிகா மற்றும் சோகேல் திருமண கோலத்தில் ஜோடியாக நடந்து வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

புதுமணத் தம்பதிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஹன்சிகா சோகேல்/Hansika-Sohael 

ஹன்சிகா சோகேல்/Hansika-Sohael  

ஹன்சிகா சோகேல்/Hansika-Sohael



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.