5000mAh பேட்டரி வசதியுடன் பட்ஜெட் விலையில் Vivo YO2 அறிமுகம்!

இந்தியாவில் புதிதாக ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் vivo நிறுவனம் அதன் 4G வசதிகொண்ட YO2 ஸ்மார்ட்போன் கருவியை 8,999 ரூபாய் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 6.51 இன்ச் HD+ டிஸ்பிலே வசதியுடன் வெளியாகியுள்ளது. இந்த போன் ஒரு 5000mAh பேட்டரி போன்ற மிகமுக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விலை விவரம்

இந்த போன் 3GB + 32GB ஸ்டோரேஜ் மாடல் 8,999 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன் இரண்டு கலர் ஆப்ஷன்களில்
(Orchid Blue மற்றும் Cosmic Grey)
கிடைக்கிறது. இதை நாம் நேரடியாக கடைகளில் அல்லது Vivo E-Store ஆகிய இடங்களில் கிடைக்கும்.

Vivo YO2 விவரம்

டிஸ்பிலே மற்றும் டிசைன்

இந்த புதிய Vivo YO2 Android 12 Go எடிஷன் சார்ந்த Fun touch OS 12
(Custom UI)
கொண்டு இயங்குகிறது. இதில் 6.5 இன்ச் HD+ (720×1600 pixels) முழு டிஸ்பிலே உள்ளது. இந்த டிஸ்பிலே காரணமாக பயனர்களுக்கு அவர்களை கண் கெடாமல் சிறந்த வியூ அனுபவம் கிடைக்கும். இதன் டிசைன் வாட்டர் ட்ராப் வகையை சார்ந்தது.

கேமரா மற்றும் திறன்

இதில் Mediatek சிப்செட் கொண்ட Helio P22 Soc மற்றும் 3GB RAM வசதி மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இதில் 8MP முக்கிய கேமரா ஆற்றும் செல்பி வசதிக்காக 5MP முன்பக்க கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. இதில் பட்ஜெட் விலைக்கு ஏற்ற Processor மற்றும் சிப் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி மற்றும் சிறப்பம்சங்கள்

இந்த போனில் Face Wake எனும் சிறப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நமது முகத்தை வைத்து போனை Lock மற்றும் Unlock செய்யமுடியும். இதில் 5000mAh பேட்டரி, 10W வாட் சார்ஜிங், 5W ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. இதன் எடை 186gm ஆகும்.

போன் விவரம்

டிஸ்பிலே- 6.51இன்ச் HD டிஸ்பிலே Processor – Octa core முன்பாக கேமரா- 5MPபின்பக்க கேமரா- 8MP RAM – 3GBஸ்டோரேஜ்- 32GB பேட்டரி- 5000 mAh OS- Android 12 Go Edition based Fun touch OS 12 Resolution- 720×1600 Pixels சார்ஜிங்- 10W, 5W ரிவர்ஸ் சார்ஜிங்
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.