கத்தார் கால்பந்து உலகக் கோப்பையை காண தாயின் நகைகளை விற்ற ரசிகர்! நேரலையில் மன்னிப்பு கேட்ட வீடியோ


கத்தார் உலகக் கோப்பைக்கு செல்வதற்காக தனது தாயின் நகைகளை விற்ற மகன் தொலைக்காட்சி நேரலையில் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தாயின் நகைகளை விற்று

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மொரோக்கோ கால்பந்து அணி ரசிகரான முகமது அமின் அம்மாரி தனது தாயின் நகைகளை விற்று கத்தார் உலகக் கோப்பையை காண சென்றுள்ளார்.

கத்தாரில் இருந்து தொலைக்காட்சி நேரலையில் அவர் பேசினார்.
அப்போது என் அன்பான அம்மா, மன்னிக்கவும். நான் திரும்பி வந்ததும், உங்கள் நகைகளை நான் ஏன் விற்றேன் என்று உங்களுக்கு விளக்குகிறேன் என கூறினார்.

இறந்துவிட்ட தாயார்

மேலும் அவர் கூறுகையில், உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் என் தாயார் இறந்துவிட்டார்.
அவரும் என்னுடன் கத்தாருக்கு உலகக் கோப்பையை பார்க்க வர வேண்டும் என விரும்பினார்.
மைதானத்தில் என்னுடன் என் தாயாரும் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் புகைப்படம் பொறித்த ஆடையை அணிந்துள்ளேன்.

நான் உன்னிடம் திரும்பிய பின்னர் அதற்கான இழப்பீட்டை தருகிறேன் அம்மா என உருக்கமாக கூறியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையை காண தாயின் நகைகளை விற்ற ரசிகர்! நேரலையில் மன்னிப்பு கேட்ட வீடியோ | Fifa Worldcup Football Fan Mother Jewels



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.