தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ரயில் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தென்காசிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்காசிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க ஸ்டாலின் பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் தென்காசியில் இருந்து ரயில் மூலம் மதுரைக்கு செல்லும் அவர் மதுரை மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்பு அன்று இரவே ரயில் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.