அமெரிக்க குழந்தைபோல் பேசும் இளவரசர் ஹரியின் மகன்: அதிர்ச்சியடைந்துள்ள பிரித்தானிய மக்கள்


பிரித்தானிய இளவரசர் ஹரியின் மகன் பேசும் விதத்தைக் கேட்டு பிரித்தானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

நெட்ப்ளிக்ஸ் தொடரில் தோன்றும் இளவரசர் ஹரியின் மகன்

இளவரசர் ஹரியும் மேகனும் வெளியிட்டுவரும் நெட்ப்ளிக்ஸ் தொடர் ராஜ குடும்பத்தின் நிம்மதியை மீண்டும் குலைத்துள்ள நிலையில், பிரித்தானிய இளவரசர் ஹரியின் மகன் பேசும் விதத்தைக் கேட்டு பிரித்தானிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

நேற்று வெளியிடப்பட்ட அந்த தொடரின் முதல் மூன்று எபிசோடுகளில் ஹரி, மேகனுடன், அவர்களுடைய மூத்த மகனான ஆர்ச்சியும் தோன்றுகிறார்.

அமெரிக்க குழந்தைபோல் பேசும் இளவரசர் ஹரியின் மகன்: அதிர்ச்சியடைந்துள்ள பிரித்தானிய மக்கள் | Prince Harry S Son Who Talks Like An American Baby

ஹரியின் மகனுடைய உச்சரிப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள பிரித்தானியர்கள்

தொடரின் ஒரு காட்சியில், தேன் சிட்டுக்கள் பறப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது ஹரி குடும்பம். அப்போது, ஹரி தன் மகனிடம், இவ்வளவு அருகில் இந்த பறவைகளைப் பார்க்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்கிறார். அதை கவனிக்காத ஆர்ச்சியோ, அம்மா, நான் உங்களுடன் இருப்பதால் என் பாதம் அழுக்காக இருக்கிறது என்கிறார்.

ஆனால், பார்வையாளர்களோ இன்னொரு விடயத்தைக் கவனிக்கிறார்கள். அது ஆர்ச்சியின் accent. ஒவ்வொரு நாட்டவர்களின் மொழி உச்சரிப்பு ஒவ்வொருவிதமாக இருக்கும் அல்லவா. உதாரணமாக, பிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் ஆங்கிலமே பேசினாலும், அவர்கள் உச்சரிப்பு வெவ்வேறு விதமாகத்தான் இருக்கும்.

அமெரிக்க குழந்தைபோல் பேசும் இளவரசர் ஹரியின் மகன்: அதிர்ச்சியடைந்துள்ள பிரித்தானிய மக்கள் | Prince Harry S Son Who Talks Like An American Baby

இந்த தொடரில் ஆர்ச்சி பேசுவது, அமெரிக்க உச்சரிப்பாக உள்ளது. ஆகவேதான், பிரித்தானியர்கள் அவரது உச்சரிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

உண்மையில், இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஆர்ச்சி 2019ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். சிறிது காலம் கனடாவில் வாழ்ந்த பிறகு, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாக அமெரிக்காவில்தான் வாழ்ந்து வருகிறார் ஆர்ச்சி.

ஆனால், மேகன் அமெரிக்கராக இருந்தாலும், ஆர்ச்சியின் தந்தை ஹரி மகனுடன் பிரித்தானிய ஆங்கிலத்தில்தானே பேசுவார்?
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.