தனியார் கல்லூரி விழாவில் சினிமா பாடலுக்கு புர்கா அணிந்து நடனமாடிய நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே வமன்ஜூர் என்ற இடத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சங்க தொடக்க விழா கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஆடி, படி கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.
அப்போது, திடீரென புர்கா அணிந்து கொண்டு மேடை ஏறிய நான்கு மாணவர்கள் பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். கீழே உள்ள மாணவர்கள் ஆர்ர்பரித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புர்கா சர்ச்சை குறித்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், நடனத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் இந்த நடனத்திற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி ஏதும் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

இதுதொடர்பாக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறிய நிர்வாகம், நடனமாடிய நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்துள்ளது. மத ரீதியான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலை கல்லூரி ஒரு போதும் அனுமதிக்காது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கல்வி நிலையங்களில் மாணவிகள் புர்கா அணிவது தொடர்பான சர்ச்சை கர்நாடகாவை மையமாகக் கொண்டு எழுந்த நிலையில், கல்வி நிலையங்களுக்குள் புர்கா அணிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் புர்கா நடனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in