சும்மா இரவில் நடந்து போனதுக்கு ரூ.1000 அபராதமா? பெங்களூரில் கணவன், மனைவிக்கு நேர்ந்த அநீதி

பிறந்தநாள் நிகழ்வை முடித்துவிட்டு இரவில் நடந்துவந்த கணவன், மனைவி இருவரையும், போலீசார் மிரட்டியதோடு 1000 ரூபாய் பைன் போட்ட சம்பவம் பெங்களூரில் அரங்கேறியுள்ளது.
பெங்களூருவில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது ரோந்து பணியில் அங்கே வந்த போலீஸார், அவர்கள் இருவரையும் யார் நீங்கள் இந்த இரவு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மிரட்டி கேட்டுள்ளனர்.
image
அப்போது அவர்கள் இருவரும் தாங்கள் கணவன், மனைவி என்று சொன்ன பின்னரும், அதனை நம்பாமல் ஆதார் கார்டை கேட்டுள்ளனர். மேலும் அவர்களின் மொபைல் போன்களை பிடிங்கி சரிபார்த்துள்ளனர். அனைத்தும் சரி பார்த்த பின்னரும், கணவன், மனைவி என உறுதியானதை அடுத்தும், நள்ளிரவு நேரத்தில் வெளியே நடந்து சென்றதற்கு என்று ரூபாய் 3 ஆயிரத்தை ஃபைனாக கேட்டுள்ளனர்.
image
அதற்கு அவர் தன்னிடம் ஆயிரம் மட்டுமே இருக்கிறது என்று கூற பேடிஎம் எண் வாங்கப்பட்டு ஆயிரம் பெறப்படுகிறது. இதற்கு நடுவில் ஃபைன் கட்டாவிட்டால் ஜெயிலில் போடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இறுதியாக ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டு இனி இந்தப்பக்கம் வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
image
போலீசின் அராஜகத்தை தாங்கிக்கொள்ள முடியாத கார்த்திக்கின் மனைவி அழுதிருக்கிறார். தனக்கு ஏற்பட்ட இந்தக் கசப்பான சம்பவத்தையும் அதனால் விளைந்த மன உளைச்சலையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் கார்த்திக். இந்நிலையில் அந்த ட்வீட்டை கண்ட காவல் உயரதிகாரிகள், அந்த பதிவில் பதிலளித்து நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.