200 கிலோவுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 2 டிங்கி படகுகள் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை, அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் ஒன்றிணைந்து தெற்கு கடற்படையில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடற்படையின் அறிக்கைக்கு அமைவாக பல்லின கடற்றொழில் 2 படகுகள் , மற்றும் போதை பொருளுடன் இலங்கையை சேர்ந்த சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 2 வள்ளங்களும் தெவுந்தர அதற்கு அப்பாலான ஆழமான கடற்பகுதியில் காணப்பட்டபோதே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.