டெல்லி: ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதிகளையும் பின்பற்றியே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. நாட்டு மாடுகள், காளை இனங்களை பாதுகாக்க ஜல்லிக்கட்டு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
