இன்னமும் தீராத கொத்தடிமை முறை – கர்நாடகாவில் மீட்கப்பட்ட தமிழர்கள்!

கர்நாடகா மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்து 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் ரங்காபுரம் ஆர்.பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (28) இருளர் இனத்தை சேர்ந்தவர் இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டம் கன்னிகடா கிராமத்தில் கரும்பு வெட்டும் பணிக்குச் சென்றுள்ளார்.
image
இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக விஜயன் வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் விஜயனை தேடி கன்னிகடா கிராமத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர் கொத்தடிமையாக வேலை பார்த்தது தெரிவந்தது.. இந்நிலையில் விஜயனின் உறவினர்களும் அதே கிராமத்தில் கொத்தடிமைகளாக கடந்த 3 மாதங்களாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சமூக ஆர்வலர் சம்பத் என்பவர், கர்நாடக மாநில ஹசான் நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து அந்த மனுமீது விசாரணை மேற்கொண்ட சந்திராபட்னா, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கன்னிகடா பகுதியில் கொத்தடிமைகளாக இருந்த விஜயன் உட்பட அவரது உறவினர்களான 11 பேரை மீட்டனர்.
image
இதைத் தொடர்ந்து அவர்களை வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் விஜயன் உட்பட அவரது குடும்பத்தினரை சேர்ந்த 8 பேரின் வங்கிக் கணக்கில் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.