மது போதையில் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த கொம்பையா என்பவரின் மகன்கள் பாண்டித்துரை மற்றும் கருப்பசாமி. இவர்கள் இருவரும் நேற்றும் முன்தினம் இரவில் டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது, இருவருக்கும் போதை அதிகமாக நிதானத்தை இழந்தனர். இதனிடையே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதன்பின் இருவரும் பாரில் இருந்து வெளியே வந்து சிறிது தூரம் நடந்து சென்றார்கள்.
அப்போது அண்ணன் பாண்டித்துரை திடீரென ஆட்டோவில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து தம்பி கருப்பசாமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அண்ணன் பாண்டிதுரை உடனே தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கருப்பு சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பாண்டிதுரையை வலைவீசி தேடி வருகின்றனர்.