பல குடும்பங்கள் விடுமுறைக்காக கூடும் நேரத்தில்..எந்த பிரெஞ்சுக்காரனும் அதை மறப்பதில்லை: மேக்ரானின் உருக்கமான வீடியோ


தங்கள் நாட்டினை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் ராணுவ வீரர்கள் அசாதாரணமானவார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


charles de Gaulle-யில் பிரெஞ்சு துருப்புகள்

சிரியா மீதான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பிரெஞ்சு துருப்புகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கடந்த திங்களன்று, எகிப்தில் இருந்து விமானம் தாங்கி போர்க்கப்பலான Charles de Gaulle-யில் இருந்து ஜனாதிபதி மேக்ரான் துருப்புகளிடம் உரையாற்றினார்.

அப்போது, சிரியா மீது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிரான்சின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மேக்ரானின் பதிவு

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர்கள் தொடர்பிலான வீடியோ ஒன்றை மேக்ரான் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ‘பல குடும்பங்கள் விடுமுறைக்காக கூடும் நேரத்தில், எங்கள் வீரர்கள் எங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

Charles de Gaulle-யில் எங்கள் மாலுமிகளுடன் நான் சில மணிநேரம் செலவழித்தேன். தேசத்தின் சார்பாக ஒரு பெரிய நன்றி. நீங்கள் அசாதாரணமானவர்கள்’ என தெரிவித்துள்ளார்.    


மேலும் மற்றொரு பதிவில், ‘நீங்கள் உங்கள் நாட்டிற்கு சேவை செய்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் பயனுள்ளதாக இருக்கிறீர்கள். நானும் எந்த பிரெஞ்சு குடிமகனும் அதை மறப்பதில்லை’ என குறிப்பிட்டுள்ளார். 

Emmanuel Macron



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.