கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 5 மீனவர்கள் திரும்பி வராததால் அவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும், கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று முதல் கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் இருந்து 3 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரைக்கு திரும்பாததால், அவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.