அமிர்தசரஸ்,:பஞ்சாபில், சர்வதேச எல்லையிலிருந்து நம் பகுதிக்குள் நுழைய முயன்ற, பாகிஸ்தான் ஏவிய ‘ட்ரோன்’ நேற்று முன்தினம் நம் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அமிர்தசரசிலிருக்கும் சர்வதேச எல்லை பகுதி அருகே, பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்த ட்ரோன், நம் பகுதிக்குள் நுழைந்தது.
நேற்று முன்தினம் காலையில் பறந்து வந்த இந்த ட்ரோனை, நம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தான் பகுதியில் விழுந்த இந்த ட்ரோனை, அந்நாட்டு வீரர்கள் எடுத்துச் சென்றனர்.
இதே பகுதியில், நம் எல்லை அருகே உள்ள ஒரு கிராமத்தில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் நடமாட்டத்தை அறிந்த பாதுகாப்புப் படையினர், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆனால், கடும் பனிமூட்டத்தை பயன்படுத்தி, அவர்கள் தப்பித்து பாகிஸ்தான் பகுதிக்குள் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், ௨௫ கிலோ ஹெராயின் போதைப் பொருள் பாக்கெட்டுகளை, நம் வீரர்கள் கைப்பற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement