பழனி: பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழனி கோயிலுக்கு தைப்பபூச விழா, கும்பாபிஷேக விழா நெருங்கும் நிலையில் பக்தா்கள் வருகை அதிகாித்துள்ளது. மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான வியாபாாிகள் தங்களது கடைகளுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பக்தா்கள் பாதிப்படைந்துள்ளனா். பொதுமக்கள் மற்றும் பக்தா்களின் புகாரையடுத்து நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
