சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது வேலைவாய்ப்பு துறையில் இருந்து சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் 14-ம் தேதி தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் கூடுதலாக ஓர் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமானது சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த அமைப்பு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் இருந்தது.