துணிவு: அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான துணிவு திரைப்படம் சக்கை போடு போட்டு வருகின்றது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா ரசிகர்களின் ஆதரவையும் இப்படம் பெற்றுள்ளது. வார இறுதியில் துணிவு படம் நல்ல வியாபாரம் செய்து வசூல் சாதனை படைத்தது. எச் வினோத்தின் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு படம் ஒரு ஆக்ஷன் படமாகும். இதில் அஜித் மாஸ் காட்டியுள்ளார். அஜித் ரசிகர்கள் பூரித்துப்போகும் அளவுக்கு படம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
துணிவு: ஓடிடி ரிலீஸ்
தற்போது துணிவின் ஓடிடி ரிலீஸ் பற்றிய செய்திகள் வந்துள்ளன. எமது சினிமா வட்டார தகவல்களின் படி, பிப்ரவரி 10 முதல் துணிவு படம் நெட்பிளிக்சில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி, பொங்கல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரூ.160 கோடி வசூல் செய்த இப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. சுவாரஸ்யமாக, அஜித்தின் 61வது வெளியீடான இந்த படத்திற்கு முதலில் AK61 என்று பெயரிடப்பட்டது. பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.
பிப்ரவரி 10 அன்று நெட்பிளிக்சில் துனிவு?
ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான துணிவு நல்ல வியாபாரம் செய்து, 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படம் OTT இல் வெளியாகும் என்ற ஆரம்ப கட்ட வதந்திகளுக்குப் பிறகு, Netflix அதை உறுதிப்படுத்தியது. இப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி இந்த ஆன்லைன் தளத்தில் வெளியாக உள்ளது. துணிவு தமிழிலும், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் வெளிவர உள்ளது உறுதி என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் அஜித் குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், மமதி சாரி, அஜய், வீரா, பகவதி பெருமாள், தர்ஷன், பவானி ரெட்டி, சிபி மற்றும் அமீர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார்.
வாரிசு: ஓடிடி ரிலீஸ்
தற்போது இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி ‘வாரிசு‘ படம் வரும் பிப்ரவரி 10ம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து ‘வாரிசு’ படத்தின் தொலைக்காட்சி பிரீமிரை பொறுத்தவரையில் ஏப்ரல் 14ம் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு நாளில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.