உயர்கல்வித் துறை சார்பில் ரூ.202 கோடியில் புதிய கட்டிடங்கள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.202.08 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கலைக் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, ஆர்.கே.நகர் அரசு கலை, அறிவியல் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, திருவள்ளுர் செவ்வாய்பேட்டை அரசு பாலிடெக்னிக், பொன்னேரி உலகநாத நாராயணசாமி, விழுப்புரம் அறிஞர் அண்ணா, செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வகுப்பறை, ஆய்வகம், விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

காங்கயம், சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், திருப்பூர், உடுமலைப்பேட்டை, கோவை, உதகை, ஆத்தூர், ராசிபுரம், குளித்தலை அரசு கலைக் கல்லூரிகள், எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக் கல்லூரி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கரூர் காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு புதிய கட்டிடங்கள், விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, ஒரத்தநாடு, கடலூர், திருவாரூர், மன்னார்குடி, சிவகங்கை பூலாங்குறிச்சி, பரமக்குடி அரசு கலைக் கல்லூரிகள், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை., எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி, மதுரை அரசு பாலிடெக்னிக், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் விருந்தினர் மாளிகை, விடுதி, கூடுதல் வகுப்பறை, ஆய்வகங்கள் என ரூ.202.08 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.