ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பயங்கர தீ: நாசகாரர்களின் சதிவேலையா?

ரஷ்யாவுக்குச் சொந்தமான முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மர்ம வெடிவிபத்து

ரஷ்யாவில், Angarsk என்னும் இடத்தில் அமைந்துள்ள முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

அந்த விபத்தில், எண்ணெய் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று தீப்பற்றி கரும்புகையுடன் எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பயங்கர தீ: நாசகாரர்களின் சதிவேலையா? | Russia Hit Explosion Suspected Sabotage

Credit: East2West

சதிவேலை

உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே ரஷ்யாவில் இதுபோல பலமுறை மர்மமான முறையில் வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசகாரர்கள் மேற்கொண்டுவரும் சதிவேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

4,300 சதுர அடி அளவிலான இடத்தை தீ கபளீகரம் செய்த நிலையில், தீயை அணைக்க 35 தீயணைப்பு வீரர்கள் போராடவேண்டியிருந்திருக்கிறது.

இந்த மர்ம வெடிவிபத்து தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
 
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பயங்கர தீ: நாசகாரர்களின் சதிவேலையா? | Russia Hit Explosion Suspected Sabotage

Credit: East2West

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் பயங்கர தீ: நாசகாரர்களின் சதிவேலையா? | Russia Hit Explosion Suspected Sabotage

Credit: East2West

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.