IIT Madras மாணவர்கள் உருவாக்கிய BharOS! இந்தியாவின் சொந்த ஸ்மார்ட்போன் OS!

டெக்னாலஜி உலகில் Android மற்றும் iOS ஆகிய பெயர்கள் யாராலும் மறக்கமுடியாத பெயர்களாக உள்ளன. இவை தற்போது உலகில் இருக்கும் பிரதான ஸ்மார்ட்போன் கருவிகளில் நாம் காணலாம். ஐபோன் வைத்திருப்பவர்கள் iOS பயனர்களாகவும், Android ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் Android OS பயனர்களாகவும் உள்ளனர்.

இந்த இரு
OS (Operating System)
களுக்கு போட்டியாக இந்தியாவின் IIT Madras சேர்ந்த மாணவர்கள் BharOS என்ற ஒன்றை உருவாகியுள்ளார்கள். இதற்கு உதவியாக ‘Jandk Operations Private Limited’ நிறுவனம் பக்கபலமாக இருந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ‘Atma Nirbhar’ திட்டத்தின் அடிப்படையில் இந்த ‘BharOS’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய OS இந்தியாவில் வாழும் 100 கோடி மொபைல் பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய ஸ்மார்ட்போன் OS அதிக பாதுகாப்பு கொண்டதாக இருக்கும் என்றும் பயனர்கள் விரும்பும் வகையில் பல புதிய வசதிகளை இதில் காணலாம் என்று தெரிவித்துள்ளது. இதில் இருக்கும் முக்கியமான சில அம்சங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்

இந்த OS மூலம் இனி பயனர்கள் அவர்களுக்கு தேவையான ஆப் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என்றும் பயனர்களுக்கு அதிகப்படியான சுதந்திரம், அதிகாரம், பயண அனுபவம் என அனைத்தும் இதில் கிடைக்கும். இதில் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.இதில் எந்த ஒரு Default Apps இல்லை. இதனால் நமக்கு OS தவிர மீதம் இருப்பது எல்லாம் ஸ்டோரேஜ் வசதிகளே. மேலும் தேவையில்லாத, பாதுகாப்பு இல்லாத எந்த ஒரு ஆப்பையும் இதில் Install செய்யமுடியாது.இந்த Bhar OS தானாகவே அப்டேட் ஆகிக்கொள்ளும். OTA மூலம் ஏதாவது அப்டேட் கிடைத்தால் தானாகவே download செய்து install ஆகிவிடும்.இதில் தனியாக PASS எனும் ஆப் உள்ளது. இந்த Private App Store Service மூலம் மிகவும் பாதுகாப்பான ஆப்கள் மட்டுமே அதில் இடம்பெறும். நமது பாதுகாப்பிற்கு ஆபத்தான எந்த ஒரு ஆப் இதில் இருக்காது.நமது தகவல் மற்றும் கருத்துரிமை என்பது இந்த Bhar OS மூலம் பாதுகாக்கப்படும்.

என்ன முடிவு?

இந்த OS தினசரி பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருந்தாலும் இன்னும் மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. முக்கியமாக பயனர்களுக்கு Android OS வழங்கும் தனியுரிமை, பேட்டரி, டிஸ்பிலே, நோட்டிபிகேஷன், செட்டிங்ஸ் போன்றவற்றை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இதுபோன்ற வசதிகள் இந்த ‘Bhar OS’ உள்ளே இல்லை. ஆனால் இது சோதனையில் இருப்பதால் வரும்காலத்தில் இந்த வசதிகள் இதில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.