Rohit sharma Toss: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் தொடங்கியது. இதில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அணியே இந்த முறையும் களமிறங்கியது. முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் யாரேனும் ஒருவர் வெளியே உட்கார வைக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், பிளேயிங் லெவனில் எந்த மாற்றத்தையும் கேப்டன் ரோகித் சர்மா செய்யவில்லை. ஆனால் அவர் டாஸ் போட வரும்போது ஒரு காமெடி செய்தார்.
ராய்ப்பூர் மைதானம்
ராய்ப்பூர் மைதானம் மிகப்பெரிய மைதானம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால், டாஸ் வெற்றி பெற்றால் பேட்டிங் செய்யலாமா? பவுலிங் செய்யலாமா? என்ற யோசனை இரு அணிகளுக்கும் இடையேவும் இருந்தது. குறிப்பாக இந்திய அணிக்கு ராய்ப்பூர் மைதானம் பற்றி நன்றாக தெரியும். மிகப்பெரிய மைதானம். இரவு நேரத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் இரண்டாவது பேட்டிங் விளையாடும் அணிக்கு கூடுதல் நன்மை இருக்கும்.
ரோகித் சர்மா குழப்பம்
இதனை தெரிந்து வைத்திருந்தாலும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு டாஸ் போடும் சமயத்தில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. மைதானத்தில் டாஸ் காயினை சுண்டிவிட்டபோது, ரோகித்துக்கு சாதகமாக காயின் விழுந்தது. இதனால், இந்திய அணி பேட்டிங்கா? பவுலிங்கா? என மைதானத்தில் கமெண்டரியில் இருந்த ரவி சாஸ்த்திரி கேட்க, குழப்பமான மன நிலையில் இருந்தார். பவுலிங் எடுக்கலாமா? பேட்டிங் எடுக்கலாமா? என யோசித்துக் கொண்டே இருந்த ரோகித் சர்மா, ஒருவழியாக பவுலிங் என்ற முடிவுக்கு வந்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் அமைதி நிலவியது.
Captain @ImRo45 is confused during toss …
A Difficult Choice But Chooses to Bowl First#INDvsNZ | #2ndODI | #RohitSharma pic.twitter.com/9FURjAJPdQ
— BCCI.TV (@bcci_tv_live) January 21, 2023
சாஹல் ரியாக்ஷன்
டாஸ் போடும் இடத்தில் ரோகித் சர்மா குழப்பமான மன நிலையில் இருந்ததை மைதானத்திற்குள் இருந்த சாஹல் கவனித்துவிட்டார். அப்போது, ரோகித்தின் ரியாக்ஷனை பார்த்து சிரித்த சாஹலின் ரியாக்ஷனும் இணையத்தில் வைரலாகியுள்ளது. எது எப்படி இருந்தாலும், ரோகித் பவுலிங் எடுத்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. நியூசிலாந்து அணியை வெறும் 108 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர்.