நீண்ட நாள் காதல்… நிச்சயதார்த்தம் நடந்த அடுத்த நாள் பிரித்தானிய இளம்பெண் மரணம்: பகீர் பின்னணி


பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவறான ஸ்பூன் ஒன்றை பயன்படுத்தி பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால் பொருட்களால் ஒவ்வாமை

நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்த அடுத்த நாள் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
24 வயதான Jess Prinsloo பால் பொருட்களால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே இறந்துள்ளதாக நம்பப்படுகிறது.

நீண்ட நாள் காதல்... நிச்சயதார்த்தம் நடந்த அடுத்த நாள் பிரித்தானிய இளம்பெண் மரணம்: பகீர் பின்னணி | Tragedy Using Wrong Spoon Bride Killed

@facebook

தமது காதலர் 24 வயதான Craig McKinnon என்பவருடன் தென்னாப்பிரிக்காவுக்கு விடுமுறையை கொண்டாடும் வகையில் சென்றிந்த போதே, இந்த துயரம் நடந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் வைத்து தான் டிசம்பர் 27ம் திகதி திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை ஜெஸ்ஸிடம் கிரேக் வெளிப்படுத்தியுள்ளார்.
அதற்கு அவர் ஒப்புக்கொள்ள, இந்த மகிழ்ச்சியான தருணத்தை தமது தாயாருடன் கொண்டாட டிசம்பர் 30ம் திகதி ஜெஸ் மற்றும் கிரேக் ஜோகன்னஸ்பர்க் செல்லவிருந்தனர்.

ஸ்பூன் ஒன்றால் நேர்ந்த துயரம்

இந்த நிலையிலேயே பால் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவரது தொண்டை அடைத்துக்கொள்ள, பரிதாப நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட ஜெஸ், மறுநாள் பரிதாபமாக இறந்தார்.

நீண்ட நாள் காதல்... நிச்சயதார்த்தம் நடந்த அடுத்த நாள் பிரித்தானிய இளம்பெண் மரணம்: பகீர் பின்னணி | Tragedy Using Wrong Spoon Bride Killed

Credit: Instagram

தமக்கான நேநீரில் ஸ்பூன் ஒன்றை பயன்படுத்தியவர், தவறுதலாக வேறு ஸ்பூனை பயன்படுத்தியுள்ளார் என்றே கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்ட கிரேக், வாழ்க்கையில் மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கிறேன், 3 ஆண்டுகளுக்கும் மேலாக தம்முடன் பயணித்த அந்த தருணங்கள் மறக்கமுடியாதவை என்றார்.

தாம் மிகுந்த துயரத்தில் இருப்பதாகவும், இதற்கு முன் உணராத வலியை உணர்கிறேன் எனவும் கிரேக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக காலகட்டத்தில் 2019ல் சந்தித்துக்கொண்ட இந்த தம்பதி, 2021ல் இருந்து ஒன்றாகவே வசித்து வந்துள்ளனர்.
தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், மரணம் நேர்ந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.