அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சீன புத்தாண்டு கொண்டாடிய 10 பேர் பலி| 10 killed in shooting in US celebrating Chinese New Year

லாஸ் ஏஞ்சலஸ் : அமெரிக்காவில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில், ௧௦ பேர் பரிதாபமாக பலியாகினர்; மேலும், 10 பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து ௧௬ கி.மீ., தொலைவில் அமைந்துள்ள மான்டெரே பார்க் என்ற பகுதியில், ௬௦ ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்தோர் அதிகளவில் வசிக்கின்றனர்.

இப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு சீன புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது இங்குள்ள ஒரு இரவு நேர நடன விடுதியில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. நடன விடுதியில் இருந்து ஏராளமானோர் அலறியடித்து ஓடினர்.

ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. நடன விடுதியில் இருந்த வர்கள் மீது, மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தன மாக துப்பாக்கியால் சுட்டு விட்டு, தப்பி ஓடிவிட்டதாக சிலர் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில், ௧௦ பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். தப்பி ஓடிய நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.