அமைதியாக இருக்கிறார்கள்..!ரொனால்டோவின் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி


பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்கு (PSG) எதிரான நட்பு ரீதியான ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு, அவரை விமர்சித்து இருந்த கால்பந்து நிபுணர்களை இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விமர்சித்துள்ளார்.


ஆட்டநாயகன் ரொனால்டோ

சவுதி அரேபியாவில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச மைதானத்தில் வைத்து ரியாத் லெவன் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் (PSG) ஆகிய இரு அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில் அல் நாசர் அணிக்கு சமீபத்தில் ஒப்பந்தம் ஆன கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் லெவன் அணி சார்பாக களமிறங்கினார். அதே போல பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சார்பாக கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, நெய்மர், மற்றும் எம்பாப்பே போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் களமிறங்கினார்கள்.

அமைதியாக இருக்கிறார்கள்..!ரொனால்டோவின் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி | Virat Kohli Lashes Out At Experts After Ronaldo

நட்பு ரீதியான இந்த ஆட்டத்தில் ரியாத் லெவன் அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி வெற்றி பெற்று இருந்தாலும், மெஸ்ஸி, நெய்மர், மற்றும் எம்பாப்பே ஆகிய முக்கிய மூன்று வீரர்களுக்கு எதிராக ஒற்றை ஆளாக களமிறங்கிய ரொனால்டோ இந்த ஆட்டம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தினார்.

மேலும் இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தியதன் மூலம் ரொனால்டோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று சவுதி புரோ லீக்கில் அல் நாசர் கிளப்பிற்காக ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிமுகமாகயுள்ளார்.


விமர்சகர்களுக்கு விராட் கோலி பதிலடி

ரியாத் XI அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் போர்த்துகீசிய நட்சத்திரமான ரொனால்டோ தனது பரபரப்பான ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில் கால்பந்து வீரர் ரொனால்டோ-வை விமர்சித்த கால்பந்து விமர்சகர்களுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பதிலடி பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

அமைதியாக இருக்கிறார்கள்..!ரொனால்டோவின் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி | Virat Kohli Lashes Out At Experts After Ronaldo

அதில் ரொனால்டோவின் புகைப்படத்தை பதிவிட்டு, “38 வயதிலும் மிக உயர்ந்த மட்டத்தில் தனது விளையாட்டை வெளிப்படுகிறார். ஒவ்வொரு வாரமும் அவர் மீது தீவிர கவனம் கொண்டு விமர்சிக்கும் கால்பந்து வல்லுநர்கள் இப்போது வசதியாக அமைதியாக இருக்கிறார்கள்”.

ஏனென்றால்” இப்போது அவர் உலகின் தலைசிறந்த கிளப்புகளில் ஒன்றுக்கு எதிராக இந்த வகையான சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினார். மேலும் அதை அவர் வெளிப்படையாக செய்து முடித்துவிட்டார்” என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.