சமூக வலைத்தளங்களில் வைரல் திருப்பதி கோயிலை டிரோனில் படம் பிடித்தவர்கள் மீது வழக்கு

திருமலை: திருப்பதி கோயிலை டிரோன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு உள்ளது. கோயில் மீது விமானங்கள் கூட பறக்க தடை உள்ளது. இந்த நிலையில் ஏழுமலையான் கோயில் டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐகான் என்ற பெயரில்  பதிவேற்றப்பட்டு உள்ளது.  இதனையடுத்து தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள்  போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் ஐதராபாத்தில் இருந்து வந்தவர்கள் டிரோன் கேமரா மூலம் வீடியோ காட்சிகள் பதிவு செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  இந்த வீடியோ, டிரோன் கேமரா மூலம் எடுக்கப்பட்டதா அல்லது கூகுளில் இருந்து சேகரிக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி  நரசிம்ம கிஷோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறங்காவலர் குழு தலைவர் சுப்பா கூறும்போது,’ ஏழுமலையான் கோயில்  ஆகம  சாஸ்திரப்படி கோயில் மீது விமானம், ஆளில்லா விமானங்கள் (டிரோன்) செல்ல  தடைசெய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.