திமுக துணை பொதுச்செயலாளராக அடுத்து யார் வருவார் ?கனிமொழி எம்.பி.க்கு வாய்ப்பு இருக்கா?

திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சி நடவடிக்கைகளில் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, திடீரென கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி திமுக வில் இருந்து விலகுவதாக அறிவித்து, தனது ராஜினாமா கடித்தை தலைமை கழகத்துக்கு அனுப்பிருந்தார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக திமுக தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

இந்தநிலையில் சுப்புலெட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் திமுக துணை பொதுச்செயலாளராக அடுத்து யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் பதவிக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் வாரிசும், திமுக வின் மாநில மகளிரணி தலைவியுமான கனிமொழிக்கே இப்பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் திமுக மாநில கொள்கைபரப்பு இணை செயலாளராகவும், தலைமைக் கழக பேச்சாளராகவும் உள்ள புதுக்கோட்டை விஜயா பெயரும் பரிசீலிக்கப்படலாம் என்று தெரிகிறது.கட்சியின் மூத்த நிர்வாகியான புதுக்கோட்டை விஜயாவுக்கும் கட்சியில் தனி செல்வாக்கு உள்ளதாம், மேலும் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே திமுக-வில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

விரைவில் திமுக பொதுக்குழு கூட்டம் பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. அப்போது மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், திமுக துணை பொதுச்செயலாளர் பதவி குறித்து அறிவிப்பார் என்று பேசப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.