தேர்தல் தோல்வி எதிரொலி குஜராத் காங்கிரசில் 38 பேர் நீக்கம்

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட 38 பேரை காங்கிரஸ் கட்சி 6 ஆண்டுகளுக்கு நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் பாலுபாய் படேல் கூறியதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் 1,5 தேதிகளில் குஜராத் சட்டமன்றத்துக்கு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

தேர்தல் தோல்வி குறித்து ஆராய சப்தகிரி சங்கர் உல்கா, நிதின் ராவத், ஷகீல் அகமது கான் ஆகிய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இரண்டுமுறை கூடி விவாதித்தபோது, 95 பேருக்கு எதிராக 71 புகார்களை பெற்றது. இந்நிலையில்.  கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து   இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.