80 சீட்டிலும் பாஜக தோல்வி… 2024 தேர்தல் முடிவுகள் இப்படித்தான் வரும்- அகிலேஷ் பளீர்!

கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே. ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் 2024 மே மாதம் நடைபெற உள்ளது. இதில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது. இங்கு மட்டும் 80 தொகுதிகள் இருக்கின்றன. தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானது.

மக்களவை தேர்தல் முடிவுகள்

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக 62, அப்னா தல் (சோனேலால்) 2, பகுஜன் சமாஜ் 10, சமாஜ்வாதி 5,
காங்கிரஸ்
1 என வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வாக்குகள் 51.19 சதவீதம். இதில் பாஜக மட்டும் 49.98 சதவீதம் ஆகும். இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன.

கஸ்டடி மரணம்

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர்
அகிலேஷ் யாதவ்
பேசிய விஷயங்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. அதாவது, கடந்த டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் கான்பூர் போலீஸ் கஸ்டடியில் தொழிலதிபர் பல்வந்த் சிங் (27) வைக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு அவர் உயிரிழந்த செய்தி தான் கிடைத்தது. பிரேத பரிசோதனையில் மார்பு, முகம், தொடை, கால்கள், கைகள் உள்ளிட்ட 24 இடங்களில் காயங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இழப்பீடும், அரசு வேலையும்

போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த பல்வந்த் சிங் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் பணமும், அரசு வேலையும் அறிவிக்குமா மாநில அரசு? முதலில் அப்படி செய்ய வேண்டும். இதேபோல் ஏராளமான குடும்பங்கள் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரசின் பதில் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்து முதலீடுகளை ஈர்ப்பதாக பாஜக அரசு வாக்குறுதி அளித்தது.

முதலீடுகள் ஈர்ப்பு

லண்டன், நியூயார்க்கில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டு வேலைவாய்ப்பு பெருகும் எனத் தெரிவித்தது. அப்படி நடந்ததா? யாரை முட்டாள் ஆக்கப் பார்க்கிறீர்கள்? பாஜக அடுத்த 50 ஆண்டுகளுக்கு தாங்கள் தான் ஆட்சி செய்வோம் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் கனவு கண்டு வருகிறார்.

கள நிலவரம்

ஆனால் அது தன்னுடைய இறுதி காலத்தை எண்ணிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் தேசிய தலைவர் உத்தரப் பிரதேசம் வந்து இரண்டு மருத்துவக் கல்லூரிகளை நேரில் பார்வையிட வேண்டும். அப்போது புரியும் கள நிலவரம் என்னவென்று. வரும் மக்களவை தேர்தலில் எத்தனை சீட்கள் வெல்வர் என்பது புரிந்துவிடும். உறுதியாக சொல்கிறேன்.

படுதோல்வி உறுதி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜக தோல்வியை ருசிக்கும். பிரிவினைவாத அரசியலை அக்கட்சி முன்னெடுக்கிறது. இவை எதுவும் மக்கள் மத்தியில் எடுபடாது. பாஜக இம்முறை தோல்வியை தழுவப் போவது உறுதி என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.