அசீமின் முன்னாள் மனைவி இவர்தான்! வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக நேற்றைய தினம் நடைபெற்று முடிந்தது.  இந்த ஆறாவது சீசனில் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றிருக்கிறார்.  நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு முன்னரே அசீம் தான் இந்த சீஸனின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்கிற செய்தி வெளியானது.  அதிகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோருடன் போட்டியிட்டு இறுதி சுற்றில் அசீம் வெற்றி பெற்றுள்ளார்.  முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்விகா, மூன்றாம் சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன் ஆகியோர் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்நிகழ்ச்சியில் அசீம் கலந்துகொண்டதிலிருந்து அவர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வந்தது, சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவது, வீண் வம்பு இழுப்பது, அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்துவது என இவர் மீது பல புகார்கள் எழுந்து வந்தது.  இவருக்கு கமல்ஹாசனும் பலமுறை வார்னிங் கொடுத்து இருக்கிறார், இருப்பினும் அசீம் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.  அசீம் மற்றவர்களை போல கேமராவுக்கு முன்னால் நடிக்கவில்லை என்றும் அவர் தனது உண்மையான குணத்தை தான் வெளிப்படுத்துகிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.  ஒருவழியாக அசீம் டைட்டில் வின்னர் ஆனது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.  அசீம் தனது நிஜ வாழ்க்கையில் சில துன்பங்களை அனுபவித்து வருவது நம் அனைவருக்குமே தெரியும்.

azeem

அசீம் தனது காதல் மனைவியையும், குழந்தையையும் பிரிந்து வாடுகிறார்.  இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு முன்னர் அஸீமின் முன்னால் மனைவியின் புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்து வைரலானது.  கடந்த 2018ம் ஆண்டில் அசீம், சையத் சோயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  அதன் பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவ்வரும் முடிவு செய்து ஒருமனதாக 2021ம் ஆண்டில் விவாகரத்து பெற்று கொண்டனர்.  அசீம்-சோயா தம்பதியினருக்கு ரய்யான் கரீம் என்கிற ஒரு மகன் இருக்கிறான், அசீம் தனது மகனை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே சென்று பார்க்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தனது மகனை பிரிந்திருப்பது நினைப்பது அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் அழுத்தத்தை பலரும் கண்டு மனம் நொந்து இருந்தோம்.  இப்போது அசீம் தனது முன்னால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களை ஆக்கிரமித்து ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.