அணுமின் நிலையங்களில் அமெரிக்க ஆயுதங்கள்; ரஷ்ய உளவுத்துறை ரிப்போர்ட்.!

வரலாற்று ரீதியாக ரஷ்யாவின் ஒரு பகுதி உக்ரைன் என ரஷ்யா கூறிவருகிறது. ஆனால் தாங்கள் தனித்துவமானவர்கள் என உக்ரேனியர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து தான் ரஷ்யா போரை தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் பல அணுமின் நிலையங்கள் மோதலின் தொடக்கத்திலிருந்து கவனத்தை ஈர்த்துள்ளன. துருப்புக்கள் படையெடுத்து 48 மணி நேரத்திற்குள் செயலிழந்த சோர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றியது, மேலும் ஜபோரிஜியா அணுமின் நிலையத்தையும் கைப்பற்றியது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. உக்ரைனை பின்னால் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இயக்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர்.

ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

அதேபோல் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ படையில் உக்ரைன் கண்டிப்பாக இணையும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். உக்ரைன் நேட்டோவில் இணையும் பட்சத்தில் அணு ஆயுதப்போர் தொடங்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய முன்னாள் அதிபர் தெரிவித்தார்.

கரூரில் மட்டும் BJP போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பு ஏன்…?

இந்தநிலையில் ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறை (SVR), உக்ரைன் நாடு முழுவதும் உள்ள அணுமின் நிலையங்களில் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்களை சேமித்து வைத்திருப்பதாக இன்று குற்றம் சாட்டியுள்ளது.

லடாக்கில் நிலை கொண்டுள்ள படையினரிடம் சீன அதிபர் ஆலோசனை.!

உக்ரைனின் வடமேற்கில் உள்ள ரிவ்னே அணுமின் நிலையத்திற்கு அமெரிக்கா வழங்கிய HIMARS ராக்கெட் லாஞ்சர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பீரங்கி வெடிமருந்துகள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் ரிவ்னே மின் நிலையத்திற்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாகவும் ரஷ்யாவின் உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.