இருளில் மூழ்கிய பாகிஸ்தான் – பொது மக்கள் கடும் அவதி!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இது பற்றி அந்நாட்டின் மின் துறைக்கான செய்தித் தொடர்பாளர் இம்ரான் ராணா, சமூக வலைதளமான ட்விட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், “வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. அது பற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்,” என தெரிவித்து உள்ளார்.

இதன்படி, கராச்சி மற்றும் லாகூர் நகரங்களில் பல்வேறு பகுதிகளில் மின் வினியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டில் இருந்து வெளி வரும் ஜியோ நியூஸ் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணியில் இருந்து நாடு முழுவதும் மின் வினியோக துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு பத்திரிகையாளர் ஆசாத் அலி தூர் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் சீன மக்கள் மீது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி.!

பலூசிஸ்தானில் குவெட்டா உட்பட 22 மாவட்டங்களில் மின் வினியோகம் தடைபட்டு உள்ளது. பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரி பொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பாதிப்புகள் நீடித்து வரும் சூழலில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், கராச்சி, லாகூர் உட்பட மாகாண தலைநகரங்களில் 12 மணி நேரத்திற்கும் கூடுதலாக மின்வெட்டு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.