கடற்படையில் ‛வகிர் நீர்மூழ்கி போர்க்கப்பல் சேர்ப்பு| Addition of Waqir sunken warship to the Navy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 5 வது ஐஎன்எஸ் ‛ வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இன்று(ஜன.,23) கடற்படையில் தளபதி ஹரிகுமார் தலைமையில் சேர்க்கப்பட்டது.

latest tamil news

இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இந்நிலையில் வரும் 2027ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை ஆகும்.

latest tamil news

இந்த சூழலில் கடந்த 2005ம் ஆண்டில் பிரான்ஸின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. முதல் நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கப்பல் 2017-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2 வது நீர்மூழ்கி கப்பல் 2019ம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 3 வது மற்றும் 4வது நீர்மூழ்கி கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்த வரிசையில் 5வது ஐஎன்எஸ் ‛ வகிர்’ நீர்மூழ்கி கப்பல் இன்று(ஜன.,23) கடற்படையில் தளபதி ஹரிகுமார் தலைமையில் சேர்க்கப்பட்டது.

latest tamil news

நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஹரிகுமார் பேசியதாவது: ‛ வகீர்’ நீர்மூழ்கி கப்பல் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்தியாவால் தயாரிக்கப்பட்டது. இது அதிகம் சக்தி கொண்டது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.