மத்திய அரசில் 11,000 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு- 2022 தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 11,409 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

SSC Exam MTS Educational Qualification: விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்

SSC MTS and SSC Havildar Selection Procedure:
கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற் திறன் தேர்வு (Physical Efficiency Test), உடற் தகுதி தேர்வு (Physical Standard Test – ஹவல்தார் பதவிக்கு மட்டும்) ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும்.

ஏற்கனவே இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், பிராந்திய மொழிகளில் எஸ்எஸ்சி தேர்வுகளை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழில் நடத்தும் முடிவை எடுத்துள்ளது.

https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 17.02.2023 ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.