அடகு நகையை திரும்ப தர மறுக்கும் நிதி நிறுவனத்திற்கு பூட்டு போட்டு பெண் போராட்டம்..!

சிவகங்கை அருகே, அடகு வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம், நகையை உடனே தரமுடியாது என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அலைகழித்த நிலையில், காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பெண் நிதி நிறுவனத்திற்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

முளைகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் குடும்ப தேவைக்காக தன்னுடைய 5 சவரன் நகையை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 600 ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார்.

நகைகளை மீட்க அவகாசம் முடிவடையவுள்ளதாக நிதி நிறுவனத்திலிருந்து கடிதம் வந்ததால், அசல் மற்றும் வட்டித் தொகையுடன் மீட்க வந்தவரிடம் பணத்தை செலுத்தினாலும் உடனடியாக நகையை தர இயலாது என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்ட நிலையில்,  சிவகங்கை நகர் காவல் நிலையம், எஸ்.பி அலுவலகம் என அனைத்து இடத்திலும் நகையை திரும்ப பெற்று தர கோரி மனு அளித்துள்ளார்.

இன்று காலை வந்து போராட்டம் நடத்திய ராஜரத்தினத்தை சமாதானப்படுத்தி பூட்டை திறக்க வைத்த காவல்துறையினர் வங்கி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.