ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே நிற்பதற்கு கூட வாய்ப்புள்ளது

செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,“ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் 27-ஆம் தேதி மகிழ்ச்சியான செய்தியாக அறிவிக்கப்படும். நானே நிற்பதற்கு கூட வாய்ப்புள்ளது. தொண்டர்கள், நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் அமுமுக போட்டியிட ஆர்வமாக உள்ளோம். வேட்பாளரை 27 ந் தேதி அறிவிப்போம்.

அம்மா ஜெயலலிதா, கலைஞர் போன்ற பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில் பல்முனை போட்டிகள் இருக்கின்றன. தலைவர்களை காலம் உருவாக்கிய பிறகு இந்த நிலை மாறும். கடந்த காலங்களில் இடைத்தேர்தல்களில் ஜெயலலிதா வெற்றி பெற்றார்கள். ஆளுங்கட்சி ஆட்சியில் இருக்கும் போது மக்கள் பொதுவாக ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பது இயற்கை. ஆனால் இந்த திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஏற்கனவே பழனிச்சாமி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் திமுகவை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் இடைத்தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் அதிருப்தியும் கோபத்தையும் மக்கள் வெளிப்படுத்துவார்கள்.

அதிமுக பிளவு பட்டியிருக்கலாம். ஆனால் அம்மாவின் தொண்டர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த இடைத்தேர்தலில் மக்கள் எங்களை ஆதரிப்பார்கள். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பழனிச்சாமிக்கு எதிராக ஆட்சி அதிகாரம், பணபலம் இருந்தாலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். அது போல ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு. மக்கள் சக்தி வெற்றி பெறும் ஆர்கே நகர் தொகுதி போல இதிலும் வெற்றி பெறுவோம்.

அதிமுகவே எந்த நிலையில் இருக்கு என்று தெரியாமல் இருக்கிறது. ஈபிஎஸ், ஓபிஎஸ் பதவி வெறியில் இருக்கிறார்கள். எடப்பாடி தலைமையில் கூட்டணி எல்லாம் அமைவதற்கு வாய்ப்பே இல்லை. அம்மாவின் பதவியை அடைந்து இடைக்கால பொதுச் செயலாளராக பழனிச்சாமி முயன்றுள்ளார். தேர்தல் ஆணையத்தின் கையில் தான் எல்லாமே உள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை யாருக்கும் கிடைக்காமல் போகும் வாய்ப்பு தான் உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.