Dr ஷர்மிகாவுக்கு புதிய உத்தரவு..! சித்த மருத்துவ இயக்குநரகம் அதிரடி..!

தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணின் மகள் டாக்டர் ஷர்மிகா. ஆயுர்வேதா மருத்துவம் படித்து முடித்துள்ள ஷர்மிகா சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு பிரபலமாகினார். உடல்நலம் குறித்து தொடர்ந்து சித்த மருத்துவ குறிப்புகளை கூறி வந்த ஷர்மிகா மாட்டிறைச்சியை சாப்பிடக்கூடாது என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதனை தொடர்ந்து,”ஒரு குளோப் ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் நுங்கு சாப்பிட்டால் மார்பகம் பெருசாகும். கண்டதை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும் என்று கூறி விமர்சனங்களுக்கு ஆளாகினர்.

ஷர்மிகாவின் சர்ச்சைக்காளான வீடியோக்கள் ட்ரெண்டாகிய நிலையில் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குநர் பார்த்திபன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், மாட்டு கறியை குறித்து சித்த மருத்துவத்தில் குறிப்புகள் இல்லை என்றும் டாக்டர் ஷர்மிகா மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக ஷர்மிகா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்தநிலையில், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜரானார்.

அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்த ஷர்மிகாவுக்கு இயக்குனரகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் மீது குவிந்த புகார்களுக்கு, வாய்மொழியாக ஷர்மிகா இன்று விளக்கம் அளித்த நிலையில், வரும் 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.