அன்லிமிடெட் டேட்டா.. அன்லிமிடெட் அழைப்பு.. வெறும் 398 ரூ.பாய் -BSNL சூப்பர் ப்ளான்

BSNL Truly Unlimited Plan: இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்படும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒரே நேரத்தில் அன்லிமிடெட் வரம்பற்ற டேட்டா மற்றும் அன்லிமிடெட் வரம்பற்ற குரல் அழைப்பு பலன்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது. சில போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தவிர வேறு எந்த மொபைல் ரீசார்ஜ் திட்டத்திலும் வரம்பற்ற டேட்டா கிடைக்காது. ஆனால் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனித்துவமான அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தில் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டாவை (Truly Unlimited Data) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த திட்டத்துடன் போட்டியிட வேறு எந்த திட்டமும் இல்லை. வோடபோன்-ஐடியா (Vi) போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தவிர வேறு எந்த மொபைல் ரீசார்ஜ் திட்டத்திலும் வரம்பற்ற டேட்டா கிடைக்காது. பிஎஸ்என்எல் வழங்கும் இந்தத் திட்டம் TrulyUnlimitedSTV_398 என பட்டியலிடப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை பற்றியும், அதன் நன்மைகள் என்ன? அதன் விலை எவ்வளவு? போன்ற விவரங்கள் பற்றிய தகவலை நாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம்.

ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா திட்டதின் நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் ரூ.398 மற்றும் மொத்தம் 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில் நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) வரம்பு எதுவும் இல்லை. அதாவது பயனர்கள் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்புகள் தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.

டேட்டா தீர்ந்துவிடும் என்ற கவலை வேண்டாம்

உங்களுக்கு எவ்வளவு டேட்டா வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற டேட்டா தேவை என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மேலும் மாதம் முழுவதும் டேட்டா தீர்ந்துவிடும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் போன்ற தேவைகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டம் சிறந்தது.

TrulyUnlimitedSTV_398 ஏன் சிறந்தது

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்திற்கு போட்டியாக எந்த திட்டமும் இல்லை. ட்ரூலி அன்லிமிடெட் டேட்டா திட்டம் போல ரிலையன்ஸ் ஜியோ, (Reliance Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன்-ஐடியா (Vi) நிறுவனத்திடமும் இல்லை. அதேநேரத்தில் வோடபோன்-ஐடியா (Vi) போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மட்டும் வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற டேட்டா திட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​​பிஎஸ்என்எல் திட்டத்தின் குறை என்ன?

மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையின் அடிப்படையில் பின்தங்கியுள்ளது என்பது உங்களுக்கு தெரியும். நாட்டின் பெரிய டெலிகாம் ஆபரேட்டர்கள் 5ஜி சேவை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ​​பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 4ஜி வேகத்தின் பலனைக் கூட இன்னும் பெறமுடியாத நிலை இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், வரம்பற்ற திட்டத்தால் வழங்கப்படும் இணைய வேகம் உங்களுக்கு போதுமானதாக இருக்குமா என்ற சந்தகமும் எழுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.